சேற்றை வாரி பூசியது
ஒரு சாத்தான்
என்னை கள்வன் என்றது
கைது செய்து
செய்யாத குற்றத்திற்கு
கூண்டில் ஏற வேண்டுமென
கொக்கரித்து சிரித்தது
பச்சை சேலைக்காரியே-சில
எச்சைக்கெல்லாம்
இச்சையில்லாமல் காதல் செய்யும்
என்னை பார்த்தெல்லாம்
துச்சமாக தான் தெரியும்
கண்மணியே
உனக்கான கவிதைகள்
கோடிக்கணக்கில்
என் மனக்கிடங்கில்
கொட்டி கிடக்கிறது
முகப்புத்தகத்தில் சிதறும்
சில்லறைகளையா
உனக்காக நான் பொறுக்குவேன்?
என் அகம் கண்டால்
இந்த யுகம் தாங்காது
குரைக்கிற நாய்களையெல்லாம்
கூண்டு வண்டியில் ஏத்துவது
என் வேலையல்ல
ஒதுங்கி போகிறேன்
ஒரு போதும் பயந்து அல்ல
சத்தமிடும் தவளை
தனக்கு தானே
மரணக்குழி தோண்டி கொள்கிறது
யுத்தமிடும் மனிதனும்
புன்னகை தொலைத்து
புதைக்குழியில் மூழ்கிறான்
நான் கடவுள்
எந்த சாத்தானின்
ஏச்சு பேச்சுக்களும்
இனி எனக்கு கேட்காது.
அழகு பதுமையே
உன்னை இன்னும்,இன்னும்
புதிய உலகத்தில்
புதுமையாய் காதல் செய்ய போகிறேன்!
-லி.நௌஷாத் கான்-
