சைவம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது உன் நினைவே
நீ இன்றி இல்லை சைவ உணவே
குழந்தையின் முதல் உணவு பருப்பு அன்னம்
விடலைகள் உனை வெறுப்பது தின்னம்
உடல் தேற்றும் உணவு நீயே – சில
நோய்க்கு மருந்தும் நீயே
சூழ்நிலையால் ஞாயிறு உனை சமைத்தால்
சூம்பி போகுது வீட்டினர் முகம்
எளிமையான உணவும் நீயே
எளியோர் உணவும் நீயே
வலிமையான உணவும் நீயே – பல
வள்ளல்களின் உணவும் நீயே
— அருள்மொழி மணவாளன்