நெருப்பாக ஜொலித்து வரும் ருத்ரனின் காளை
கருப்பாக மிரட்டி வரும் காலனின் காளை
ஏறுபூட்டி சோறு போடும் விவசாயின் மித்திரன் காளை
வாடிவாசல் தாண்டி துள்ளி வரும் காளை
உயிர் துச்சமென்று காளையை, அடக்க வந்த காளையர்
மயிர்க்கூச்செறிந்து மஞ்சுவிரட்டு காணுகின்ற கன்னியர்
காளை அடக்கும் காளையை, அடக்கும் கன்னியர்
— அருள்மொழி மணவாளன்
