ஜாடிக்கேத்த மூடி
லேடிக்கேத்த மேடி
என ஊர் மெச்சிய வாய்கள்
என்னா ஜோடி பொருத்தம்
பத்து பொருத்தமும்
பக்காவா இருக்கு
ஜாதகம் கூட
சாதகமாய் இருக்கு என
பெருமை பட பேசினர்
அறுபத்தி நான்கு வெரைட்டி
சாப்பாடு போட்டு
லட்சக்கணக்கில் செலவு செய்து
ஆயிரக்கணக்கில் உற்றார்-உறவினர்களின்
ஆசிர்வாதங்களோடு
நடைபெற்ற திருமணம்
மனப்பொருத்தம் இல்லாததால்
பத்தே மாதத்தில்
மன ஒத்து பிரிந்தனர்!
-லி.நௌஷாத் கான்-