அவசியத்திற்கு
அவதரித்த
உடை.. இன்று
அனைவராலும்
ஆராதிக்கப் படுகிறது.
தளர்வாய் இருந்தால்
சுகமாய் நடக்கலாம்.
இறுக்கமானாலோ
சுகமில்லை..
இளைஞர்களை
மலடாக்கும்
மர்ம உடையிது…
அழுக்கு ஜீன்ஸ்
அதிக மவுசு…
கிழிந்த ஜீன்ஸ்
அதிக மரியாதை…
என்றே நினைக்கும்
ஒரு கூட்டம்…
ஆள் பாதி ஆடை பாதி
இது தானே
உலக பார்வை…
இடத்திற்கு ஏற்ப
இடம் பெறட்டும்
இந்த இனிய ஜீன்ஸ்.
S. முத்துக்குமார்