1.ஞாபகங்கள் வருகின்றன ஒவ்வொரு முறையும் மேடையில் பேசிய பாரதியின் கவிதைகளும், வேடத்தில் அணிந்து தொலைத்த காந்தியின் மூக்கு கண்ணாடியும், வாங்கி தர மறுத்த நேதாஜி உடையும், நேருவுக்கு ரோஜா தான் அழகு என தோழியொருத்தி சூடித் தந்த பூவும்,
பசை போட்டு ஒட்டியும் கீழே விழுந்த கட்டபொம்மன் மீசையும், தொப்பி இல்லாததால் வேசம் கட்டாத பகத்சிங்கும்…
அழகும் அறிவுமாய் ஏற்றப் பட்ட சுதந்திர தாகம் இன்று ஒரு நாள் விடுமுறை, தொலைகாட்சியில் கழிவதும் அறிவால் தான்…
- இன்று சுதந்திர தினம் ஒரு நாள் விடுமுறை தொலைகாட்சியில் விளம்பரத்தில் வந்து நம்மை பார்த்து செல்கிறார் காந்தி… Independence day sale இல் அடிமைப்படுத்து கின்றன online கடைகள்..எதையோ இதையோ என எல்லாவற்றையும் வாங்க சுதந்திரமாய் நம்மை அடிமைப் படுத்துகின்றன விளம்பரங்கள்…
கங்காதரன்
