பால் வெளியின், பிரபஞ்சத்தில், துளிதுளியாய் பறந்து விரிந்த விண்மீன் கூட்டத்திலே,
ஒரு சூரிய குடும்பத்தின் உறவுகளே
தனக்கென்று ஒரு சுற்றுப்பாதையில் நிலைக்கொண்டு தடம் மாறா பயணத்தில் சுழலும்
கோள்களே!
வெண்மை பூத்த நிலவு பெண்ணாய்,
சென்னிறமான செவ்வியலாய்,
ஞானத்தை அளிக்கும்
புதனாய்,
எமக்கு குருவாய்,
சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தையும் உள்ளிழுக்கும் குளிர்ந்த வெள்ளியாய்,
நீலக்கண்ணியாய்,
நிழலாய் மறைந்தவளையும், நினைத்தும் மறந்தும்
பின்னேரமும் பலவித மலர்களைத் தேடி அலையும் மானிட பதராய்,
பிறந்த எமக்கு
உன் திடம் எமக்கில்லையே…!!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: தடுமாறும் மனமும் தடம் மாறக் கோள்களும்
previous post
