தத்தித் தாவும்
தவளையே… ஏன்
இந்தச் சிரிப்பு…
பச்சை இலையில் இச்சையோடு
எட்டிப் பார்க்கிறாய்..
பூச்சியைக் கண்டு
நச்சென நாக்கால் உண்டு விடுவாய்…
நீரில் நிலத்தில்
ஒளியும் வரை பாம்பு பறவை உனை
அண்டாது…
மழைக் கால மதி
மயக்கத்தில் –உன்
இராக்கால ராகங்கள்
இரவின் கீதங்கள்..
S. முத்துக்குமார்