கயிறுகளின் சிறையில்,
உள்ளம் மட்டும் தனியாக,
உடல் முழுவதும் இறுக்கமாய்,
சுற்றி வளைத்து பிடித்திருக்கிறது.
சின்னஞ்சிறு கனவுகள்,
நம்பிக்கை துளிகளோடு,
சிக்கலான முடிச்சுகளில்,
மறைந்து, மங்கிப் போகிறதே.
தனிமையின் நிழலில்,
அசைவற்று அமர்ந்து,
கண்ணீரற்ற விழிகளோடு,
கதை சொல்லுகிறது ஓர் சிற்பம்.
விடுதலையின் ஒளிக்கீற்று,
எப்போதடா வரும்,
இந்தக் கயிற்றின் பிடியில் இருந்து,
உயிர் எப்போதடா மீளும்
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: தனிமையின் நிழலில்
previous post
