தமிழினிமை
நாகரிகத்தின் புதிர் எம் தமிழ்!
பழமையின் பழமை!
தேனினும் இனிய
தெவிட்டாத
தேன் மொழி!
வெளிநாட்டவரும் பழகி மழலையாய் பேசும் மொழி!
அறிவுக்கு தீனியிட்ட
அமுத மொழி!
நீதிக்கு வித்திட்ட நிறைவான மொழி!
நெஞ்சுக்கு நீதி சொன்ன நெருப்பு மொழி!
கானத்தில் மனதை கரைக்கும் மொழி!
வள்ளுவனுக்கு வான் புகழ் தந்த வள்ளல் மொழி! பயில்வதற்கும்
பருகுவதற்கும்
பகுமானமான மொழி!
விலோசனங்களை நிறைத்த
விந்தை மொழி!
செவிக்கினிய செம்மொழி!
சுஜாதா.
படம் பார்த்து கவி: தமிழினிமை
previous post