தலையணைகள் எல்லாம்
எனக்கு பிடிக்காது
உறங்குவதற்கு
உன் மடியில்
தலைசாய்க்க சிறு இடம் போதுமடி
கவலைகள் தீர
உன் தோள்களை விடவா
அந்த தலையணைகள்
ஆறுதல் தந்து விட போகிறது
என் கவிதைகளை போல
என் வாழ்க்கையும்
கனவிலேயே போய் விட்டதோ என்னவோ?
எத்தனை வெறுத்தாலும்
அந்த தலையணைகள் மட்டுமே
என் கண்ணீரை சுமக்கும் தாய்!
-லி.நௌஷாத் கான்-