தாகம் தனித்தது நீர் நிலைகள்
தக தக வெயில் காலம்
நீர் இன்றி தவிக்கும் உயிரினம்
நீர் நிரப்பும் குப்பிகள் ஏராளம்
அவை இன்றி ஏது பயணம்
அவை தான் நம் உயிர்நாடி
வண்ணக் குப்பிகள் வரவேற்கிறது நம்மை
வரவேற்போம் குப்பி களை கூஜாவின் மறுபிறவி
பள்ளி சிறார்கள் சுமக்கும் குடுவை
பயணத்தின் நாயகன்
வண்ணக் குடுவை
சுமை ஏதும் இல்லை சுமக்க
சுமப்பதும் நம் தாகம் தணிக்கவே.
- ருக்மணி வெங்கட்ராமன்
