தாத்தா வின் சொத்தென பாட்டி சொன்னதுண்டு…
அவர் காதுகளுக்கு மட்டுமே கேட்கும் வகையில் சப்தம் வைத்துக் கேட்பாராம்…
அமுதைப் பொழியும் நிலவே என ஒலித்தால் அடுத்த அடி அவர் பாடுவாராம்…
மலர்களைப் போல் பாடலுக்கு இறந்த தங்கச்சிக்காக அழுவாராம்…
பாட்டு மட்டுமல்ல செய்தி கேட்டு முதலாக ஊருக்கே சொல்வாராம்….
எப்போது தூங்குவாரென அறிந்ததில்லையாம் பாட்டி…
தாத்தா இறந்த போது ரேடியோ வும் பழுதானதாம்…
அவருக்கு பேருக்கு தான் நான் மொத பொஞ்சாதி ஆசை எல்லாம் ரேடியோ தான் என்ற பாட்டி
தாத்தா இறந்த நாளில் மட்டும் ரேடியோ வை புதுசாக்கி அதை ஒலிக்க விட்டு சென்று விடுவாளாம்…
அதென்னவோ தெரியவில்லை இன்றுவரை TV பார்க்கும் பாட்டி ஒரு முறை கூட ரேடியோ வில் பாட்டுக் கேட்டு நாங்கள் பார்த்ததே இல்லை. சக்களத்தி சண்டையாய் நினைத்து விட்டாலோ என்னவோ…
கங்காதரன்
படம் பார்த்து கவி: தாத்தாவின் சொத்து
previous post
