விடுமுறையை நன்றாக
தடுமாறாமல் செலவழிக்க அடுக்குமாடி வீட்டிலிருந்து
அருமை பெருமையான
எருமை முகம் மாட்டப்பட்ட
தாத்தாவின் கிராமத்து
வீட்டிற்கு வந்த பேரனிடம்
சட்டென வேட்டையாடிய
தன் வீர விளையாட்டு
மீசையை முறுக்கியபடி சொல்ல
ஆசையுடன் கேட்டான் பேரன்!
உஷா முத்துராமன்