திசையெங்கும் உள்ள
தேநீர் கடைகளில் எல்லாம்
அவனது இராஜ ராகம்
ஒலித்து கொண்டே இருந்தது
துபாயிலிருந்து
அப்பா வாங்கி தந்த
சோனி டேப்ரிக் கார்டில்
எப்போதாவது தான்
எஃப் எம்மில் அவனது குரலை
கேட்க முடிந்தது
ஜனனி என அவன் குரல் ஒலித்தாலே
ஜகம் அவன் இசை தான் என
சொல்ல தோன்றியது
மாங்கா பத்தை,தேன் மிட்டாய் வாங்க
அம்மா கொடுத்த
பாக்கெட் மணிகளை எல்லாம் சேமித்து
முப்பது ரூபாய் கொடுத்து
வாங்கி வரும் கேசட்டை
நிஜமாலுமே
ரீல் கிழிய,கிழிய
ஒட்டி வைத்து
கேட்ட வரலாறு உண்டு
ஏனோ
இப்போதெல்லாம் வலைதளங்களில்
கோடான கோடி
இளம் இசையமைப்பாளர்களின் இசை கொட்டி கிடந்தாலும்
அவன் மிச்சம் வைத்த
இசைக்கு ஒரு துளிக்கு கூட ஈடாகாது!
-லி.நௌஷாத் கான்-

 
