படம் பார்த்து கவி: தினம்,தினம்

by admin 2
76 views

தினம்,தினம்
தனம்,தனம் என்கிறது-இதுவரை
பணம் பின் சென்ற வயசு
யாரடி நீ மோகினி
என்ன தான்
செய்வதாய் உத்தேசம்?
மரியாதையாய் கேட்கிறேன்-என்
மனசுக்குள் எப்ப தான் வருவாய்?
விடை தெரியாமலே
விழி பிதுங்கி நிற்கிறேன்
கெஞ்சி மட்டுமல்ல கடைசியாய்
கொஞ்சியும் கேட்கிறேன்
பேயே
இதுவரை
திரும்பி நின்று -எனை
அணு,அணுவாய் தின்றது போதும்
கரு நிலவே
உன் இராட்சசி முகம் காட்டு!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!