திரும்பி பார்த்ததுக்கே
திருவள்ளுவனானேன்டி
கண் பார்த்தால் கலிங்கத்து பரணி
கொஞ்சும் கொலுசொலியில் சிலப்பதிக்காரம்
மணக்கும் உன் கூந்தல் மல்லிகையில் மணிமேகலை
சிலுக்கும் ஜிமிக்கியில் சீவக சிந்தாமணி
இடை நடை மேல் வழியும் வியர்வை துளியில் வளையாபதி
மயிலாய் மழையில் ஆடும் நடனத்தில் அண்டமே பிரமித்து போகும்
குண்டலகேசி
இப்படி இலக்கியங்களும் -ஐம்பெருங் காப்பியங்களும்
அதிசயித்து நம் கதையை காதலாய் பேசிக் கொண்டிருக்கின்றன!!
மறு ஜென்மம் எடுத்து மீண்டுமொருமுறை பார்க்காதே
இனி உன்னை காதலாய் எழுத
என் தமிழ் போதாது!!
-லி.நௌஷாத் கான்-