1.திறக்கப் படா கதவினைப் போல் உன் மனது காதலெனும் தூதஞ்சல் வாசலில் உன் அனுமதிக்காக
2.கதவோரம் மட்டும் நிற்காதே எட்டிப் பார்க்க தூண்டுகிறது என் மனம்
3.உன் மனமெனும் இதயக் கதவினை திறக்காதிருந்தும் எட்டிப் பார்க்கிறது என் நினைவு உன்னுள் பசுமையாய்…
4. இனி எப்போதும் இணைவதில்லை எனப் பிரிந்தாலும் காதலை கதவு கொண்டு பிரித்தாலும் நினைவுகள் வற்றாமல் பசுமையாய் சொல்லுகின்றன நம் காதல் ஞாபகங்களை…
5.முதலாளிக்கும் தொழிலாளிக்கும் கதவுகளே காட்டி விடுகின்றன வித்தியாசத்தை…
கங்காதரன்
