இதயத்தை இதமாக்கும்
நீல வண்ண உரையணிந்து
இதய வடிவில் காட்சி தரும்
உள்ளத்தின் சினுங்களை
உள்வாங்கி ஒலிக்கும்
உலோகமே ,…
உன்னிடம் மட்டுமே
என் இதயம்
பொய் சொல்லி
தொற்று விடுகிறது
நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்று வார்த்தையில்….
பல முறை செவிகளுக்கு
முத்தமிட்ட களைப்பில்
ஒன்றின் மேல் ஒன்றாக
படுத்துரங்கும்,
உடலின் உண்மை தன்மையை
உள் வாங்கி உண்மையை
உணர்த்தும் உத்தமனே…
சிறு வட்ட வடிவ பேலைக்குள்
மனித உடலின் மொத்த
நாடி துடிப்பையும்
வரையறுத்து விடும்
கடவுளின் மரு உருவான
மருத்துவர்களின்
இதய துடிப்பே நீ தானே…
உன்னால் பல இதயங்கள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றன…
பலரது வாழ்க்கையாகவே
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்….
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.