கண்களில் கண்டறியா ஒற்றை மெளனம்,
திரைகளில் மட்டும் தெரிந்த கோபம்.
தீபாவளி வெடியில் சிறுமைகளை துப்பாக்கியாக்கி,
பயத்தோடு விளையாடிய பொம்மைகள்.
விலை கொடுத்து வாங்க வழியின்றி,
கடைகளில் தொங்கிய கனவுகளை
பார்த்த படி,
நண்பர்களிடம் இரவலாய் வாங்கி,சுருள் பட்டாசுகளை வெடித்து விட்டு,
மனதை சமாதானமாக்கி,
அந்த துப்பாக்கிகளையும் திரும்ப ஒப்படைப்பேன்.
அவ்வளவு தான் இதனோடு எனது தொடர்பு.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: துப்பாக்கி
previous post
