தற்காத்து கொள்வதற்கென உருவான சாதனம்,
அடுத்தவருக்கு இன்னல் செய்வதற்கும் காரணம் தேடும் சாதனம்
உணர்வு இல்லா இரும்புக் கருவி தான் அது,
உணர்ச்சி இழந்தால் அழிவை தருவது.
நீதிக்காக சுமந்தால் பாதுகாவலன்,
அநீதிக்காக சுட்டால் கொடூரமானது
அமைதியின் சின்னம் ஆகாது எப்போதும்,
ஆணவத்தின் கருவி ஆகும் சில சமயம்.
அன்பு முளைத்தால் அடங்கிவிடும் ஆயுதம்,
அருள் வளர்ந்தால் மடங்கிவிடும் ஆயுதம்..
கையில் எடுத்தவன் எல்லாம் கொடுமைக்காரன் அல்ல ..
பயிற்சிக்கு எடுத்தவனும் உள்ளான்…
உஷா முத்துராமன்
படம் பார்த்து கவி: துப்பாக்கி சாதனம்
previous post
