துரிதமாக செய்ய
சுவையாக உண்ண
ஆசையை தூண்டும்
அற்புத உணவு
வேலை செய்து
அலுத்துக் களைத்து
ஓய்வு வேண்டும்
உடலின் பசியை
சட்டென்று போக்கும்
துரித உணவு
என்றோ ஒரு நாள்
உண்ண சரிதான்
தினமும் உண்ண
ஆரோக்கியம் கெடும்
….
வண்ணம் பூசிய
சுருள் சுருளான
உன் முடி காண்கையில்
திடீர் உணவான
நூடுல்ஸ் ஆசையில்
முல் கரண்டியில்
சுற்றுவது போல
என் விரல்களே ஃபோர்க்காக
உன் பின்னந்தலை நுழைத்து
உன் பிறை நுதல் தனில்
இதழ் பதிக்க
எண்ணம் தேன்றுதே
— அருள்மொழி மணவாளன்