இல்லமெனும் வானின்
தணணெனும் நிலவு நீ…
இல்லத்தரசிகளின்
இதயச் சிம்மாசனத்தில்
இடம்பெற்ற
இலக்கியம் நீ…
கால மகளின்
பருவ மாற்றத்தின்
தூதுவன் நீ
ஆம்
கோடையின் குளுமை நீ…
உனக்குள்
அடைத்து வைத்த
அத்தனையையும்
அரவணைக்கும
உனைப் போல்
உழைக்க
உலகில் யாருண்டு!
ஆதி தனபால்
