உன்னிடம் செல்லச் சண்டை வளர்க்கவே உன் (தூரிகை)brush யைப் பயன்படுத்துகிறேன்…
இது எனக்கானது என்பாய் நான் உணக்கானவன் என்பேன் சில கோவங்களும்,பல முகச் சுளிப்பும் காலையை கடத்துகிறது உற்சாகமாக…
உன் இதழ் பட்ட சுவை என்னோடு ஈர்க்கிறது சில நேரம் எறும்புகளையும் தூரிகையினிடத்தில்…
இருவருக்குமான சண்டைகளை சரிசெய்ய பல நேரங்களில் செல்லச் சண்டை தேவையாய் இருக்கிறது…
உன் துரிகையை நான் எடுக்கக் கூடாதென என் கண்ணுக்கு அகப்படும் சாக்கில் ஒளித்து வைப்பாய்.. பின் ஏனென சமாதான சண்டையில் உன் வெட்கச் சிரிப்பு தந்துவிட்டுப் போகிறது புத்துணர்ச்சியை…
நேற்றைய நாளின் மறந்து விட்ட முத்தப் பரிமாற்றத்தை காலையில் இணைந்திருக்கும் நம் தூரிகைகள் ஞாபகப் படுத்துகின்றன…
கங்காதரன்