தேங்காய் நாரிற்கு விடை கொடுத்தவன்
அன்று கரி பாத்திரம் முதல்
அனைத்து பாத்திரங்களுக்கும்
அதிரடியாக தேய்ப்பதற்கு
அவசரமாக உதவியது
அன்றைய தேங்காய் நார் மட்டுமே.
அதை உணர்ந்த சிலர்
அதற்கு ஈடாக ஒரு
அவசியமான ஸ்பான்ஜினை
அழகாக கண்டுபிடித்துக் கொடுக்க
அதனால் என் வீட்டு பாத்திரங்கள்
அற்புதமாக ஜொலித்தது
அதற்காக உதவி
அந்தத் தேங்காய் நாரிற்கு
அதரம் விரிய விடை கொடுத்தேன்.
உஷா முத்துராமன்