அம்மாவெனும் முதல் முத்தாய்
நாவில் இனித்து
தித்திப்பை திவ்யமாய் தெளித்து
அறிவின் அடைக்கலமாய்
ஆழக் காலூன்றிய வேராய்
அடி நெஞ்சம்தனில்
பொங்கிப் பெருகிடும்
உயிரின் ஆதாரமாய்
உணர்வின் உச்சமாய்
தாய் மண் தருவித்து
திரவியமாய் ஊட்டிய தேனமுது
என் தாய்மொழி!
புனிதா பார்த்திபன்