என்னிடம் பேசுவது போல்
யாரிடமாவது
பேசி இருக்கிறாயா என்றாள்.
மாலை சூரியன் மறைந்து
இரவு நிலா உலா வந்து
மீண்டும் சிம்மாசனத்தில் அமரும்
உதயச்சூரியன் வரும் நொடி வரை உள்ள
நீண்ட பொழுதுகளில்
தேவதைகளிடம் மட்டும் தான்
இப்படி பேசுவேன் என்பதை
கடைசி வரை
அவளிடமும்,
பேசி கொண்டிருந்த செல்போனிடமும் சொல்லவே இல்லை!
-லி.நௌஷாத் கான்-
