முடிவு
தொடங்கிய எதுவும்
முடிய வேண்டும்
என்பது விதி…
இங்கே முடிந்தாலும்
எங்கோ ஆரம்பம்…
இன்னும் வேறு
எங்கோ தொடரும்..
சிறு மாற்றம் இருக்கலாம்..
அதை உணராமலும்
போய் விடலாம்…
சரியான ஆரம்பம்
சுபமான முடிவு
என்பார்கள்…
சுகமான முடிவு
அடுத்ததை
ஆரம்பிக்க வைக்கும்.
செயலின் இறுதி
முடிவு தான்…
பொருளின் இறுதி
முடிவு தான்…
வாழ்வின் இறுதி
முடிவு தான்…
எனினும்…
எதுவும் முடிவதில்லை
உருமாறி
தொடர்கிறது…
அதுபோல
இங்கும்
இதுவும்
தொடரும்..!!
S. முத்துக்குமார்