நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்…
இந்த தொடரில் உள்ள எல்லா இணைப்புகளும் புழக்கத்தில் உள்ளன…
நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்
வேறு ஒருவரோடு தொடர்பில் உள்ளார் …
நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை …
இத்தனையையும் மீறி
நீ தொடர்பில் வந்த சில வினாடிகளில் அப்பா கூப்பிடுகிறார் என்று நீ
தொடர்பை துண்டிக்கும்போது
அலைபேசியில்
என் மனம் அலை பாய்கிறதே.
க.ரவீந்திரன்.