தோற்றுப் போய்
பல வருடங்கள் ஆகியிருக்கும்
முப்பதுக்கு மேல்
திருமணமும் நடந்து முடிந்திருக்கும்
அப்பா என அழைக்கும்
திருமணத்திற்கு தயாராக உள்ள
மகனோ/மகளோ கூட இருக்கக்கூடும்
கண்பார்வை குறைந்து
கண்ணாடி கூட
அணிந்திருக்கக்கூடும்
எல்லாம் கடந்த பின்பும்,
எதையும் கண்ட பின்பும்
எப்போதாவது
தினசரி நாளிதழ்களையோ,
பிடித்த கதைகளையோ
சுவாரஸ்யமாய்
புரட்டும் பொழுதுகளில்
உன்னுள்
உன்னை அசைத்து பார்க்க
அந்த பொல்லாத காதல்
காலை தேநீராய்
அப்பப்ப
உன்னை தேடி வரும்
தூய நரையிலும்
தூங்காமல் செய்திடும்
காலாவதியாகாத
தோற்றுப் போன முதல் காதல்!
-லி.நௌஷாத் கான்-
