தோல்வி தான்
வாழ்க்கையின் முதல் படிக்கட்டு
தூக்கி எறிந்த அவளை
ஒரு போதும் தூற்றாதே
தோல்வியை கற்றுக்கொடுத்த
அவள் தான் உன் முதல் குரு
அவள் நினைவுகளுக்கு கூட
முத்தமிடு
காதலையும் கடந்து போக
கற்றுக்கொள்.
யாரோ நீ,யாரோ நானாக
வாழ்ந்து பார்
பாகற்காயாய் கசக்கும்
வாழ்வு கூட
தேனாய் இனிக்கும்!
-லி.நௌஷாத் கான்-