உருவத்தில் பெரியது ஆனாலும்
அருவமில்லை என்று அனைத்து
வயதினரையும் மயக்கும் களிறு
மன்னர்களில் யானைப் படையுடன்
தென்னகத்தில் ஆண்ட கதை
விண்ணைத் தொட்ட பெருமை உண்டு.
கண்கள் சிறிது ஆனால்
எண்ணங்கள் பெரிது
நல்லது செய்தால் நண்பன்
அல்லது செய்தால் வன்மத்துடன்
பழி வாங்கி விடும்.
எச்சரிக்கையுடன் பழகுவோம்.
தும்பிக்கையுடன் கைகோர்த்து
நம்பிக்கையுடன் நட்பை வளர்ப்போம்..
மனம் விரும்பும் தோழனாக
யானையை ரசிப்போம்!
உஷாமுத்துராமன்
