நகவெட்டியால்
வெட்டி எறியப்படும்
உயிர் இல்லாத
நகம் முதல்
உயிர் நாடி
நரம்புகளில் எல்லாம்
நீயே நிறைந்து இருக்கிறாய்…..
காலம்
நம்மை பிரித்தாலும்
கடமை
கைகளை கட்டி போட்டாலும்
வெறுமையில் கூட
நீயே
நிறைவாய் நிறைந்து இருக்கிறாய்.
புத்தி
புதியதாய் வாழ் என்று சொன்னாலும்
மனசு மட்டும் இன்னும்
மாறாமல் இருப்பது ஏன்??
காமம்
கண்களில் தொடங்கி கட்டிலில்
முடிந்து விடும்-அந்த
கேடு கெட்ட வரிசையில்
தயவு செய்து
என் காதலை
சேர்த்து விடாதீர்கள்.
என் காதல்
இதயத்தில் தொடங்கி
கல்லறையில்
வெறும் உடல் மட்டும் சாகும்
அமர காதல்.
கம்பன் இருந்திருந்தால்
கம்ப ராமாயணத்துக்கு பதிலாக
என் காதலை
காவியமாக்கி இருப்பான்.
காலத்திற்கு
உயிர் இருந்திருந்தால்
பின்னோக்கி சென்று
என் காதலை
சேர்த்து வைத்து இருக்கும்.
விதி விளையாட்டிடம்
மதி மனிதன் தோற்று விட்டேன்.
என் வாழக்கை
திசை தெரியாமல் ஓடும்
நதி போல
ஆகி விட்டது!
நதியில் கூட
கோடையில்
தண்ணீர் வற்றி போகலாம்-ஆனால்
என்
காதல் நதியில்
அவள் மீது கொண்ட
அன்பும்,பாசமும்
என்றுமே
அழிந்து போகாது.
கானலாய் ஆன போதும்
கவிதையாய்
வாழும் என் காதல்!
-லி.நௌஷாத் கான்-