வானை முட்டும் கட்டிடங்கள்
மூச்சு முட்டும் கூட்டங்கள்
சாலையோர தேவதைகள்
சல்லாபிக்க அழைத்தாலும்
இல்லம் வந்த தேவதையை
உள்ளம் நிறைத்து விலகி செல்
பாதை மாறா பயணம் செய்து
இலக்கை நோக்கி நகர்ந்து செல்
எங்கும் ஓட்டம் எதிலும் பரபரப்பு
நகர வாழ்க்கைக்கு பழகிக்கொள்
நரக வாழ்க்கை என்று புலம்பாதே
புலம்பெயர்ந்து வந்து விட்டாய்
புலன்கள் விழிப்புடன் இருக்கச்செய்
பளபளக்கும் ஒளி கண்டு
விட்டில பூச்சியாக வீழாதே
சொர்க்கம் நரகம் என்று வானில் இல்லை
எல்லாம் இருக்குது உன் கையில்
சிந்தித்து சிறப்பாய் வாழ்ந்து விடு
- அருள்மொழி மணவாளன்