பந்தலிட்டு வளர்ப்போம்
பாகல் உன்னை…
கசந்தாலும் —
எந்தன் நலன் காப்பாய்….
சர்க்கரையின் ஆதிக்கம் உன்
கசப்பில் கரையுமே..
உன்னை வெறுப்பார்
பொறுப்பறியார்..
கொடி அழகு
பூ அழகு..
நீ பழுத்தால்
நிறம் அழகு..
கரடு முரடாய்
இருந்தாலும்
கசந்து போய்
இருந்தாலும்
என்றும் நீ
இனியவன்…
S. முத்துக்குமார்
