நவகிரகங்களும்
ஆண்டவன் கட்டளைப்படி
எனக்கான கணக்கை
எப்படி தீர்மானித்துள்ளது என்பதை
நானறியேன்
மரணிப்பதற்குள்
மனக்குழியில் உள்ளதை
நீயோ,
நானோ
மனம் திறந்து சொன்னால் தான் என்ன?
காதல் என்பதே
பேரன்பின் பரிமாற்றம் தானே
ஈகோ தான்
இணைகளின் இடைவெளிக்கு காரணமென
இணைய உலகின் மனிதர்களுக்கு
புரியாமல் இருப்பது ஏனோ?!
-லி.நௌஷாத் கான்-
