ஒன்பது கோள்களின் உச்சம்
நீ அருகில் இருந்தால் துச்சம்
காலம் இருக்கிறது மிச்சம்
நீயின்றி வாழத்தான் அச்சம்
பால்வெளி அண்டத்தில்
சூரியனை சுற்றி வரும் கோள்கள்
பார்த்த கணத்திலிருந்து
உன்னையே சுற்றி வருகிறேன் நான்
சூரியனின் பார்வைதான் தூரமாய் இருக்கும்
கிரகத்தின் மீது பட தாமதமாகும்
உன்னருகே இருக்கும் என் மீது
உன் பார்வைபட ஏன் தாமதமோ
— அருள்மொழி மணவாளன்