ஆலைகள் அதிகம் தோன்றும் முன்
அனைத்து இடங்களிலும் ஆட்சி செய்தது
பார்க்க பளபளப்பாய்
பக்குவம் அதிகம் தேவையில்லை
பகட்டாய் மெல்ல நுழைந்தது சீனி
ஓரமாக போ நீ என்று
லாவகமாக ஒதுக்கினோம்
நாட்டுச் சர்க்கரையையும் கருப்பட்டியையும்
மெல்ல மெல்ல வெள்ளையன் உள்ளே வர
மெதுவாய் ஒதுங்கியது கருப்பும் பிரவுனும்
நாட்டு இனிப்பு மறைய
வெள்ளையன் கை ஓங்க
நீரிழிவு நோயும் பெருகியது
திடீரென சமூகம் விழித்தெழ
மீண்டும் வளம் வருகிறது
நாட்டுச் சக்கரை
— அருள்மொழி மணவாளன்.