வெண் சர்க்கரையோ
கொடுக்கும் நோயை!
நாட்டு சர்க்கரையோ
கெடுக்கும் வியாதியை!
அளவுக்கு மிஞ்சினால்,
அமிர்தமும் நஞ்சாகும்!
அளவோடிருந்தால் நாட்டு சர்க்கரையும்
இனிக்கும் ஒளஷதமாகும்!
மரணம் வரை இனிக்கும் சர்க்கரை!
மரணித்தால்
அகலும் மற்றவரின் அக்கறை!
குளம்பியிலும்
சேர்க்கலாம்!
தேநீரும் கலக்கலாம்!
பாயாசத்திற்கும் பகிரலாம்!
மருத்துவரால் சிபாரிசாகும்,
நாட்டு சர்க்கரையின் நிறமோ பழுப்பு!
யாருக்கும் இல்லையே,
உன் மேல் வெறுப்பு!!!
இப்படிக்கு
சுஜாதா.