படம் பார்த்து கவி: நான் கொசு மஹாராணி

by admin 1
23 views

என்னடா மனிதனே, புகையை விட்டாய்?
என் அழகிய சுவாசத்தை மாற்ற நினைத்தாயோ?
உன் சுருள் புகையோ வெறும் நாடகம்,
என் முகமூடிக்கு முன் அது ஒரு தூசு!
“கொசு தொல்லை” என்று புலம்பும் நீ,
என் ராஜதந்திரத்தை அறிவாயோ?
உன் இரத்தம் என் விருந்து,
உன் பயம் என் ஆனந்தம்!
அந்தப் பச்சைச் சுருள் என்ன செய்யும்?
என் பறக்கும் திறனை குறைக்குமா?
நான் விஞ்ஞானி கொசு, அறிவாளி!
உன் யுக்திகள் எல்லாம் எனக்குப் பழசு!
நீ தூங்கும் நேரம் என் ஆட்டம்,
உன் கனவில் கூட நான் வருவேன்!
சும்மா இரு மனிதனே, உன் வேலையப் பாரு,
நான் கொசு மஹாராணி, உனக்கு தொல்லை தருவேன்!

இ.டி. ஹேமமாலினி
சமூக ஆர்வலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!