படம் பார்த்து கவி: நான் தேடும் தேவதை

by admin 1
32 views

காலை நான் கண் விழித்ததும் கை தொடும் தேவதை நீயே !
விரல் உன்னை வருடாமல் விழி மூடிவதில்லை !
அழுகை என்றாலும் நீ !
சிரிப்பு என்றாலும் நீ !
நீ என்னை விட்டு விலகுவதும் இல்லை !
பிரிவதும் இல்லை !
உணவு உண்டாலும் உன்னுடன்
உறங்கினாலும் உன்னுடன்
நீ கூறும் கதை கேட்கிறேன் !
நான் கூறுவதை பிழையிருந்தாலும் ஏற்கிறாய் !
அறிவை பெருக்கி அனந்த மடைய வைக்கிறாய் !
மதி மயக்கி உன் மாயவலையால் சிக்கி தவக்கிறேன் !
முகம் பார்க்கும் கண்ணாடி நீ !
உன்னை உரையிட்டு வைத்தாலும்
வாய் திறந்து கொள்கிறாய் !
பட்டி தொட்டியெல்லாம
பார்த்து விடலாம்
பத்து நொடியில்
பயண சீட்டு இல்லாமல் !
உன்னிடம் உள்ள புதையலை தேடி தேடி
நான் புதைந்து போகிறேன் உன்னுள்
புதுபுது நபர்களை
காட்டி புடைத்து போய் விட்டது என் மூளை !
நீ சிணுங்கினாள் என் கண்கள் தேடுவது உன்னையே !
நீ மட்டும் உண்ணும் வேளையில்
ஓய்வு எடுத்துக் கொள்கிறாய் !
பிற்காலத்தில் நீ என்னுடன்
ஒட்டி பிறந்து விடுவாயோ !
உன் சேவை பலருக்கு தேவை
சிலருக்கு போதையாகிறதே !
வருடம் மாறினாலும் வடிவம் மாறினாலும் வலம் வந்து கொண்டேயிருப்பாய் !
காதும் வாயும் உறவாடிய நிலை மாறி கண்ணுடன் இணைந்து விட்டாய் !
கலிகாலத்தில் கடவுளையும் இணைத்து விடுவாய் போல
உன்னை வர்ணிக்க வார்த்தை
தேடுகிறேன் கைபேசியே !!!

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!