பாதாம்..
நிலக்கடலையில்
சுகம் காணும் எனக்கு
பாதாம் ‘எட்டாக்கனி’…
எண்ணித் தின்னும்
பாதாம் தருமாம்
எண்ணிலடங்கா பயன்கள்….
அளவுக்கு மீறினால்
அதற்குள்ளும் நஞ்சு..
ஊறவைத்த பாதாம்
உள்ளும் புறமும்
பேணுமாம்….
பசை யுள்ள பாதாம்
‘பசை’யுள்ள மனிதற்கு
இசைவாகக் கிடைக்கும்….
இங்கே… கூடை நிறைய பாதாம்..
எனதாக்கிக் கொண்டேன்…. இனி..
ஆரோக்கியத்தில்
நானொரு ‘பிஸ்தா’
நிலக்கடலையே நீ..
‘இன்று போய் நாளை வா..
S. முத்துக்குமார்