நீ
நான்
நிலா
நம் இருவர் மட்டுமே உள்ள தனிமையான இரவு பேரழகு தான்
காமத்தில் அணைந்து போகாத
ஒரு நீள நீண்ட அணைப்பு சொல்லும்
நம் காதல் என்னவென்று?।
நெற்றி தொடும் எச்சில் முத்தத்திலும்
விரல் தொடும் ஸ்பரிசத்திலும்
இன்னமும் மிச்சமிருக்கிறது
நம் உச்சக் காதல்!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)