ஆண்:
நீச்சல் குளம் போலே
நீயும் நின்றிருக்க
என்று நீச்சல் அடிக்க
பெண்:
ஆற்று வெள்ளம் அல்ல
கிணற்று நீர் தானே
நித்தம் நீச்சல் பழகு
ஆண்:
புத்தம் புதிதாய்
நீச்சல் பழக பல
தப்பு நிகழும் தெரியாதா?
பெண்:
அச்சம் தேவையில்லை
தப்பும் தெறியாத
புத்தம் புது குளம் அறியாயோ!
ஆண்:
பளிங்கி குளம் இதிலே
பாசம் நிறைய இருக்கு
வழுக்கி விழ கூடுமோ?
பெண்:
விழுந்து எழுந்தாலும்
தடு மாறி நடந்தாலும்
தாய் போலே உனை தாங்குவேன்
கணேஷ்
