நீதி பேசுவதற்கு கூட
அநீதியாய் தடை கேட்கிறாய்
கேட்டால்
சுதந்திரம் என்கிறாய்.
என் சுதந்திரம் எங்கே என்று
கேள்வி கேட்டால்
உன் காதலை போல
அதுவும்
கேள்வி குறியாக தான் இருக்கிறது.
மௌனங்கள் பதிலாகாது என்பதை
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும்
எப்போது தான்
புரிந்து கொள்ள போகிறாயோ?
தயவு செய்து
காதலுக்கு சரி,தவறென்று
எதுவும் இல்லையென்று
முடிவுரை மட்டும்
மூச்சு முட்ட எழுதாதே
சுதந்திரம்
உனக்கானது மட்டும் தான் என்பதை
உன்னை போலவே
உணர்ந்து கொண்டேன்!
-லி.நௌஷாத் கான்-
