நீரின் சுழி ஆழத்தில் உருவாவது
அதன் உலகம் திகில் கொண்டது.
அழகோடு அச்சமும் சேர்ந்து நிற்க,
அதை காண மனம் விரும்புகிறது
அதுபோல் சுழல்கின்றது உயிரின் ஓட்டம்,
அதில் மறைகின்றது வாழ்க்கை ஓட்டம்.
சிறு துளி கூட அதில் கரைவதில்லை,
பெரு வலிமையாய் ஞாலம் தெரிகின்றதே.
நீர் சுழல் சொல்கின்றது உண்மையாய்,
இயற்கை சக்தி எப்போதும் வலிமையானது
என உணர்வோம்
உஷா முத்துராமன்
படம் பார்த்து கவி: நீரின் சுழி
previous post
