தனி வீடு இல்லை
ஆனால் இருக்கும்
அடுக்குமாடி கட்டிடத்தில்
மிடுக்கான பெரிய பால்கனி
அதில் அமைத்த வீட்டுத்
தோட்டத்தில் தொட்டியில்
வெட்ட வெளிச்சமாக
விதைகளைப் பயிரிட
தேவை அதற்கு நீர் என
பாவை குளியறையிலிருந்து தேவையான நீர் பாய்ச்ச
வாங்கினாள் நீள (நீல) குழாயினை
தேங்கிய ஏக்கம் போக
நீர் பாய்ச்ச வளர்ந்ததே
குட்டி குட்டி செடிகள்
காத்திருக்கேன் அதில்
காய் பறிக்க………
தினம் நீர் பாய்ச்ச
மனம் விரும்பும் நீ தேவை!
உஷா முத்துராமன்
