குடுவைக்குள் அடைபட்ட யாவுமே
தக்க வைக்கவும் …
தேவைக்கான
பூர்த்தியை
சேமிக்கவே …
சேமிப்பின் வக்கிரம்
உச்சம் பெறும்போது
பதுக்கல்
தலைத்தூக்கும்.
நீர் உயிர்களுக்கு
ஆதாரம்
அணைகளில்
அடைக்கவும்!
குடுவைக்குள்
அமிழ்த்தவும்!
அதிகாரம் மிகுந்தால்
மனித வர்க்கத்தை
மடை திறந்து தண்டனை தர தண்ணீர் தாமதம் செய்யாது
லால்குடி
மலையரசன்
