நீல வானிலே
நீள் வட்ட பாதையிலே
விண்வெளியில் ஓடம் போலே
செயற்கை கோள் ஒன்று சுற்றுது
உச்சியிலே அமர்ந்து
உலக இயக்கங்களை அளந்து
ஆருடம் சொல்லுது
புயலின் திசைவேகம் கணிக்குது
கரை கடக்கும் இடம் குறிக்குது
மழை பெய்யென பெய்யுது
வட தென் துருவங்களை இணைக்குது
நாலு திசையும் ஒன்றாய் குறைக்குது
உள்ளங்கையில் உலகம் தெறியுது
காலத்தை கடக்க நினைக்கும்
காலம் கனியாமல் தவிக்குது
சர் கணேஷ்
