நீள் குழல் நீயே
நீலவண்ணம் அழகே
நீர் பாய்ச்சுவாயே
நீர் தெளிக்கும் அழகு
நீராடிய நினைவு சிறு வயது கனவு
நிழலாடுது இன்று
வால் சுருட்டி நீயும்
வாயடைத்த பின்பும்
வனப்பாக இருப்பது
வியப்பு
குழாயுடன் நீ தொடர்பு கொண்டு
குளமாக ஆக்கிவிட்டால்
குறைப்பதற்கு
குழாயின் வாயை அடைக்க குச்சலிட்டு
வந்திடுவேன்
வாசலிலே நீர் தெளிக்க
வசதியாக நீ இருக்க
வளையாது என் முதுகு
கவிஞர் வாசவி சாமிநாதன்
திண்டுக்கல்